Tag Archives: மழை

மழை

இருண்ட மேகம். குளிர்ந்த காற்று
இளந்தென்றலில் தள்ளாடும் நாற்று.
குயில்கள் குதூகலிக்கும் தன் ஓசையோடு
கூத்தாடும் மண் தன் வாசனைக் கொண்டு

மழை பொழிந்தது. இப்புவியும் நனைந்தது.
மாடுகளும் ஆடுகளும் ஆங்காங்கே மேய
இருக்காமல் செய்து மழை பெய்ய
இப்புவியும் நனைந்தது. இப்புவியும் நனைந்தது.

சட சடவென்றன. சாலையோர மோடின
சத்தமிடும் மழை நீர் அது அன்றோ!
பத்து விரல் தீண்டிட
மொத்த வுள்ளம் மகிழ்ந்திட
கொட்டியிசைத்திடும் மழை நீர் அது அன்றோ!