அமுதா

அவள் பெயரோ அமுதாவாம். அவளோ
அழ கழகாக இருப்பாளாம்.
ஈரோட்டருகி லோர் குக்கிராமத்தில் அழுதே
ஈர்க்கு மிசையோடுப் பிறந்தாளாம்.
நன்கு கணிதம் கற்றாளாம் அதோடுத்தமிழில்
நற்புலமை யையும் பெற்றாளாம்.
ஏரணம் பூரணமாகக் கற்று பிறருடன்
யௌவன மொழியோடு பவ்வியமாக யிருப்பாளாம்.
ஓர் நாளன்று அமுதாவின் அன்பு
அம்மாவாம் இதைச் சொன்னாளாம்.
“நம்மை கடவுள்தான் காப்பாற்றுகிறார்” என்றாளாம்.
நயத்தோடதற் கமுதா சொன்னாளாம்.
“மதங்கொண்ட மனிதர் சிரங் கொள்ள
மனதறியாமல் கடவுள் கண்டாராம்.
இல்லாக் கடவுட் கஞ்சிக் கெஞ்சி
அம்மா நீயறிவி ழக்காதே.
இதோநான் ஷெல்லியின் கவிதைகளைத் தமிழில்
ஆக்கியுள்ளேன் அதற்குப் பலரிடம்
பாராட்டும் பெற்றுள்ளேன் இதை
படித்துச்சொல் எப்படியிருக் கிறதென்று” என்றாளாம்.
“உன் கருணைக் கருணையேத் தெய்வமே
என் பிள்ளைக்குத் தமிழருளியுள்ளாய்”
மறுமொழி யிவ்வாறு வரவே அவள்
மனம்மாற அக்கவிதைக ளுதவும்
என்று மனமாற புரிந்து கொண்ட
அமுதாவின் அகத்தில் ததும்பியதாம் புன்னகை!

Advertisements

2 responses to “அமுதா

  1. nice use of language vijay.. its a pleasure to read your posts!! the manam-maara was a subtle and nice one..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s