Monthly Archives: December 2010

அமுதா

அவள் பெயரோ அமுதாவாம். அவளோ
அழ கழகாக இருப்பாளாம்.
ஈரோட்டருகி லோர் குக்கிராமத்தில் அழுதே
ஈர்க்கு மிசையோடுப் பிறந்தாளாம்.
நன்கு கணிதம் கற்றாளாம் அதோடுத்தமிழில்
நற்புலமை யையும் பெற்றாளாம்.
ஏரணம் பூரணமாகக் கற்று பிறருடன்
யௌவன மொழியோடு பவ்வியமாக யிருப்பாளாம்.
ஓர் நாளன்று அமுதாவின் அன்பு
அம்மாவாம் இதைச் சொன்னாளாம்.
“நம்மை கடவுள்தான் காப்பாற்றுகிறார்” என்றாளாம்.
நயத்தோடதற் கமுதா சொன்னாளாம்.
“மதங்கொண்ட மனிதர் சிரங் கொள்ள
மனதறியாமல் கடவுள் கண்டாராம்.
இல்லாக் கடவுட் கஞ்சிக் கெஞ்சி
அம்மா நீயறிவி ழக்காதே.
இதோநான் ஷெல்லியின் கவிதைகளைத் தமிழில்
ஆக்கியுள்ளேன் அதற்குப் பலரிடம்
பாராட்டும் பெற்றுள்ளேன் இதை
படித்துச்சொல் எப்படியிருக் கிறதென்று” என்றாளாம்.
“உன் கருணைக் கருணையேத் தெய்வமே
என் பிள்ளைக்குத் தமிழருளியுள்ளாய்”
மறுமொழி யிவ்வாறு வரவே அவள்
மனம்மாற அக்கவிதைக ளுதவும்
என்று மனமாற புரிந்து கொண்ட
அமுதாவின் அகத்தில் ததும்பியதாம் புன்னகை!

Advertisements

இரட்டித்த பூரிப்பு

அழகிய விழிகளோடு
அகன்ற பார்வைக்கொண்டு அவன்
ஆழ்நெஞ்சில் அவள்
ஆசையை ஊற்றினாள்.
உயிரிய வேதியியலை
கசடறக் கற்ற அவனுக்கு
ஹார்மோன்கள் செய்யும்
அறிய விந்தை இரட்டித்தது
அவன் பூரிப்பை.
அவள் நவரச இதழை
நயத்தோடு சுவைக்கச்
செய்ய அவன் அவளோடு
மூழ்கினான் வர்ணக் கனவுலகில்…

The little big talk

Sendhan collects flowers everyday and gives it to the temple while Amudhan is a Mathematician. On a silent day, early in the morning, Amudhan sits on the banks of a river enjoying the mild melodies of flowing stream with whirls, and birds flying with charming dexterity, while Sendhan is chanting “Manthra” within, dipping his head into the river.
He raises his head and sees Amudhan. “Aren’t they beautiful?” he asks.
“Indeed my friend. They are!”.
“Hows your research going?”
“Going… like those clouds passing by,
Sometimes they shed rain and,
At times they make me go dry”
“I like this you know. The thing you people are doing, opening ignorant minds. I like this.”
“Interesting to hear,
As we doubt on things that you fear.
It’s our opinion and we make it a fact,
With logic and evidence intact!”
“But still I’m doing this like a hypocrite, been doin this for nearly three decades. Couldn’t give up you know!”
“All of a sudden, may be hard to give up,
But with shear will, control your own emotions.
Overcome! And with cheer, you’ll stand up!
‘Master your emotions’- says a few of your philosophies themselves!”
“How come you appreciate religious philosophies, changed your mind, or is it changing like mine?”
“I have already torn off the theo (‘sacred’) tag,
And there are also fallacies I ignore.
With time they only lag.
They are mere books
And can’t fool around anymore!”
“I use to make fun of you remember, ‘being a mathematician is of no use’. With pompous feel, I used to pick flowers, thinking I serve the humanity directly. But nothing happens. Now I slowly realize, I’m of no use now.”
“All this you realized already.
Your guts took its time to utter,
And to make your mind calm and steady.
Now don’t you feel sorry and bitter.”
Sendhan, determined, smiles. While Amudhan still looks at the bird, thinking, contemplating may be.

The leech world

Two leeches, Udi & Dhudi are relaxing on a couch after having a heavy meal of blood from a trekker passing by.
“Dei* if I talk about some social issues many ask me to go do my work.” Udi uttered suddenly after a pleasant silence. “Yes da*. What’s wrong in that?” asked Dhudi.
“The work we do is for survival da. I agree its important but aren’t we supposed to be curious about things happening around?”
“A few may not find time for all these da”
“Yea at least they can just shut their mouth up and move. Why are they so much bothered about me? I do not want to just survive but live!”
“Dei, I think few more trekkers are coming by. Before we get stamped and die we need to go hide somewhere. Nowadays their blood tastes really worse, I don’t know what these guys eat, junk fellas!”
“I want to live da not merely survive.”
“I agree but now we need to hide. What you say is fine but we do need to take care of our survival at times. We shouldn’t get lost discussing issues, although its important as well, we need to sorta balance both. Ok va?”
“Ok ..Ok..”

*English equivalent – dude

தமிழ்

மேலும் தமிழை விரும்புவேன்
அத்தமிழ் என்னை விரும்பவே
கவிதைகள் பல கிறுக்குவேன்.
வெறும் கிறுக்கல்களாக முடியாது
அழகு வடிவம் பெற
அயரா துழைப்பேன் – அவை
நடையும் நயமும் பெறச் சிந்தையில்
தடையும் தயக்கமும் அகல
என் உள்ளெண்ணங்கள் அழகிய
அர்த்தங்கள் கொள்ள என்றென்றும் யாசிப்பேன்.
இம்மொழியை கற்றுத்தா னென்னப் பயனென்பார்
வீணாக அழிப்பாய் காலத்தை என்றறிவுரைக் கூறுவார்
அவர்கட்கு, நான் பிழைக்க முயலவில்லை
வாழ வுத்தேசிக்கிறேன் என்று புலப்படக் கூற
நற்புலமையைத் தேடுவேன் என்னுள்!

Bizarre loop of music

He sees new colors, finds mentally gripped
In life’s unusually new cheer.
And could feel no ever-chasing fear
And none could he hear!
It is silent, musical and profoundly pleasant,
Sitting alone in the deep forest.
Observing complicated life forms around,
He contemplates without a bound!
The leaves, creeping ants, crawling snakes,
Blood sucking, soft and gently-skinned leeches,
Sticking mud and its moist, the waterfalls,
And its unknown random rhythmic noise…
Engross him!
Now he opens the closed eyes.
And Bach’s music ends.
Sitting alone in the dark room, he smiles
Emptily looking at bizarre walls.
Playing the next set of notes,
He sees new colors,
Closing his eyes…
———————————————————
This poem can be read again and again infinitely. It has no ending. You may start reading from “Sitting alone in the dark room, he smiles” line and go to first line (which will explicitly tell you that music takes him mentally to a forest) or you may start reading from the beginning (which will surprise you that he is actually in a dark room).

கொள் அருளை அறிவில்

கொள்வதைக் கொள்ளாமல் பகுத்தறிவினை கொன்று
இறையருளின் சூழ்ச்சியே இவ்வாழ்கை யென்று
கொண்டாடுவோரு முண்டோ?
வெல்வதை வெல்லாமல் வெறும் வேள்வியொன்றே
போதுமான தென்ற போக்குடன் இப்புவியில்
இருப்போரு முண்டோ ?
தீயதை தீரத்தோ டெதிர்க் கொள்ளாமல்
பேடிபோல் விதியின் பேரில்
விடையை காண்பாரு முண்டோ?
வேண்டாத வினையெல்லாம் வேண்டுதல் மூலம்
வெறுமாகு மென்னும் வேடிக்கை மனிதர்
வாடிக்கையாய்த் திரிகின்றனரோ?
குழலோடு யாழிசைத்துக் குயில்
பாட்டோடு காதல் புரிவோரை
அழவிட்டு பிரித்தெறிந்து பிறந்த
கோத்திரம் பார்போரு முண்டோ?
பழைய சாத்திரத்தில் பைத்தியமாகி
வைய சரித்திரத்தில் ஒப்பற்ற மேதாவிகளை
கொன்றுகுவித்த தெல்லாம் போதாதோ?
அறிவொளி கிரணங்கள் கொண்டு
அறிவீன இருட்டை அகற்றி
மண்ணில் மானிடராய் வாழ அவர்
மனதும் வைப்பாரோ?