பயிர் வளர்க்கப் பயின்றான்
உழுதான் தன் நிலத்தை
உயிர்ப்பாசத்தோடு ஏர்க்கொண்டு
உரமிட்டு பொற்சித்திரையில்…
எண்ணெயிட்டு திரியேற்றினாள் அவன்
மனையாள் – எதிர்ப்பார்த்து
எண்ணமிட்டச் சுடரொளியை தந்துஅது
மகிழ்வித்தது பிரகாசத்தோடு…
மேகங்கள் நகரவே கால்நடையோடு
காலமுங் கழிந்தது – அவன்மனமோ
சோகங்கள் தீருமென்றே மாவரிசி
கோலம்போல் நெளிந்தது அறுவடைக்காக…
பண்ணோடு பண்பட்ட பயிரது
தந்தது நற்விளைச்சலை அதையவன்
கண்ணோடு ஒற்றிக் கொள்ளவே
வந்தது துளிக்கண்ணிர் ஆனந்தச்சொட்டோடு…
சந்தைக்குச் சென்றான் செல்வம் பார்க்க
வறுமைத் தொடைக்க வளர!
விந்தை மனிதர் சட்டம் செய்தாராம்
இறக்குமதியா மாதலால் விலைச்சரிவாம்!
முதலுக்கு ஈடில்லாமல் முதலை
வாயில் தவளை ஆனான்
பதிலுக்கு கண்டான் கயிற்றை
ஓர்த்தருவாயில் மாண்டான் மனைவியோடு…
————————————————————-
கர்நாடகத்தில் மனவள்ளி கிராமத்தில் நடந்த ஓர் உண்மை சம்பவம் அடிப்படையில் எழுதப்பட்டது.