வெட்டி அடிக்குது மின்னல்! கடல்
வீரத்திரை கொண்டு விண்ணை இடிக்குது!
கொட்டி இடிக்குது மேகம்!
கூக் கூவென்று விண்ணைக் குடையுது காற்று!
சட்டத்தடச் சட்டத்தடச் சட்டா
சட்டத்தடச் சட்டத்தடச் சட்டா
என்று தாளங்கள் கொட்டி கருகுது வானம்!
Archive for October 16th, 2008
பாரதியின் புரட்சி!மழையின் எழுச்சி!
Posted in Uncategorized on October 16, 2008 | Leave a Comment »
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
Posted in Uncategorized on October 16, 2008 | Leave a Comment »
பூசுவாய்ச் சாம்பலை மெய்யிற்கு
புகட்டுவாய்ப் பற்பாடல்கள் தீயவர்க்கு
பூங்காவனமாவாய் மனதை சாட்சியாய் கொண்டு வாழ்வோர்க்கு
எந்தையே!
புறமிருக்கும் பொருள் வாழ்க்கை வேண்டாமென்று
பொறியை நெற்றியில் கொண்டிருக்கும்
நின்மெய்யடியை நாடுவேனே இந்நொ டிமுதலே!
தழீஇம் தழீஇம் தண்ணம் படும்
Posted in Uncategorized on October 16, 2008 | Leave a Comment »
ஏசுவான் எண்ணற்ற குற்றமில்லாதோரை
பற்றற்ற பிற உயிர்களைக் கண்டால்
விசரென்று வீசுவான் கற்கலை
பூசுவான் கறியை எளியவர் முகம் கண்டால்
தூசென்று மதிப்பான் ஈசன் வனத்தை
பாசங்கோடு வாழ்ந்துப் பச்சரிசியும் நெல்லும்
பிறர்க்கில்லாது மோசம் செய்வான்
மனமெனும் சாட்சியை
மண்ணோடு மறைத்து மாயச் செய்வானேல்
சொல்கிறேன் அவனுக்குச்
சிவசக்தி யிருக்கிறாள் அவன் அழிவிற்கு!